நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் : மின் வாரிய அதிகாரிகள் தகவல்

நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் : மின் வாரிய அதிகாரிகள் தகவல்
Published on

நாகை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டு இருந்தது.

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாகை மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து கிடக்கின்றன.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 46 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com