ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு? - தமிழக அரசு விளக்கம்

மின் கட்டண உயர்வு என பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு? - தமிழக அரசு விளக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடாபான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிமானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் வருவாய், நிணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடாந்து இழப்புகள் அதிகரித்து வருவதால் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் மீண்டும் மின்கட்டண உயாவு அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவிக்கையில், "2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை." என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com