திருமழிசையில் 17 இடங்களில் மின்சார திருட்டுகள்; மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை

திருமழிசையில் 17 இடங்களில் மின்சார திருட்டுகள் நடந்தது மின்சார வாரிய அதிகாரிகள் கூட்டு ஆய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருமழிசையில் 17 இடங்களில் மின்சார திருட்டுகள்; மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை
Published on

செங்கல்பட்டு மின்சார பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திருமழிசை பகுதியில் மின்சார வாரிய அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17 இடங்களில் மின்சார திருட்டுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்து 39 இழப்பீட்டு தொகையாக மின்சார நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மின்சார நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.52 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின்சார திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர் செல்போன் எண் 94458 57591 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com