மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

கோபி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி ஆனார்.
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
Published on

கடத்தூர்

கோபி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி ஆனார்.

மின்வாரிய ஊழியர்

நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதி கோரக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59).

இவர் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் உள்ள துணை மின் நிலையத்தில் ஊழியராக (போர்மென்) பணியாற்றி வந்தார். நேற்று துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) பராமரிப்பு பணி நடைபெற்றது.

சாவு

இந்த பணியில் சண்முகம் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. அதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிழந்தார். இது பற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com