மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும். 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ, பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கேங்மேன் மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com