மின்னொளி கபடி போட்டி

பாணாங்குளத்தில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
மின்னொளி கபடி போட்டி
Published on

இட்டமொழி:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாணாங்குளத்தில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் பாணாங்குளம் அணியினர் முதல் பரிசும், நாங்குநேரி அணியினர் 2-வது பரிசும், பாளையங்கோட்டை சிறைத்துறை காவலர் அணியினர் 3-வது பரிசும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com