மின்னணு வாக்கு எந்திரத்தை ஒழிக்க வேண்டும்: நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு


மின்னணு வாக்கு எந்திரத்தை ஒழிக்க வேண்டும்: நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு
x

100 நாள் வாலை திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளதை கண்டித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், நடிகர் மன்சூர் பங்கேற்றார்.

சென்னை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளதை கண்டித்து சென்னையில் நடந்த காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்தில், நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது:-

ஆட்டோவில் மீட்டருக்கு சூடு வைப்பது போல், பா.ஜனதாவினர் மின்னணு வாக்கு எந்திரத்திற்கு சூடு வைத்து ஆட்சிக்கு வந்துள்ளனர். எனவே, முதலில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஒழிக்க வேண்டும். ராகுல் காந்தியை இளம் தலைவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவருக்கு வயதாகிக்கொண்டே போகிறது. எனவே அவரை சீக்கிரம் பிரதமர் பதவியில் அமர வைக்க வேண்டும்.

நடிகர் விஜய் மட்டும் தான் தனி விமானத்தில் செல்ல வேண்டுமா? ஏன் நாம் செல்லக்கூடாதா? நான்கைந்து தனி விமானம் புக் செய்து நாமும் டெல்லி சென்று போராடுவோம். பிரதமர் மோடி வேறு நாட்டிற்கு தப்பி ஓடிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 2029 வரை அவர்களை ஆட்சி செய்ய விடக்கூடாது. அதற்கான புரட்சி இதோ ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கிளம்புது. மகாத்மா காந்தி பெயரை தொடுவதற்கு என்றுமே அவர்கள் பயப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story