பண்ணாரி சோதனைச்சாவடி அருகே குட்டியுடன் நின்று கரும்பை சுவைத்த யானை

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே குட்டியுடன் நின்று கரும்பை சுவைத்த யானை
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே குட்டியுடன் நின்று கரும்பை சுவைத்த யானை
Published on

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை குட்டியுடன் யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அவை பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் நடமாடியது. இதை பார்த்த பண்ணாரி வன சோதனைச்சாவடி, காவல்துறை சோதனைச்சாவடி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் பணிகளில் ஈடுபட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் அச்சமடைந்தனர்.

ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. அந்த வழியாகச் செல்லும் கரும்பு லாரிகளில் இருந்து கீழே சிதறி விழுந்த கரும்பு துண்டுகளை குட்டியுடன் நின்று யானை சுவைத்தது. சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com