யானை தாக்கியதில் மாடு செத்தது.

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் யானை தாக்கியதில் மாடு ஒன்று பரிதாபமாக செத்தது.
யானை தாக்கியதில் மாடு செத்தது.
Published on

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் யானை தாக்கியதில் மாடு ஒன்று பரிதாபமாக செத்தது.

கால்நடை வளர்ப்பு

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, காட்டுப்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஆனால் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் சாகுபடி பணிகளில் திறம்பட செயல்பட முடிவதில்லை. இந்த நிலையில் கால்நடை வளர்ப்பு அனைத்து சூழ்நிலையிலும் மலைவாழ் மக்களுக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

யானை தாக்கி மாடு செத்தது

இந்தநிலையில் காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் மாடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த யானை ஒன்று, ஒரு மாட்டை தாக்கியது. இதில் மாடு அந்த இடத்திலேயே செத்தது.

இதனால் கால்நடை வளர்க்கும் மலைவாழ் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் யானையின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com