தாயை இழந்து தவிக்கும் குட்டி யானையை ஏற்க மறுக்கும் யானை கூட்டம்

6 ஆவது நாளாக வனத்துறையினர் வேறு யானை கூட்டத்திடம் சேர்க்க முயன்றனர்.
தாயை இழந்து தவிக்கும் குட்டி யானையை ஏற்க மறுக்கும் யானை கூட்டம்
Published on

கோவை,

கோவை, தடாகம் அடுத்த பன்னிமடை வனப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை 35 வயது மதிக்கதக்க பெண் யானை இறந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில், அதன் ஒரு மாத குட்டி யானை, தாயை பிரிந்த தவிப்பில் உலாவிக் கொண்டிருந்தது. தொடர்ந்து குட்டியை மீட்ட வனத்துறையினர் கடந்த 5 நாட்களாக தடாகம் வனப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுவரை எந்த யானை கூட்டமும் குட்டியை ஏற்றுக்கொள்ளாததால், 6 ஆவது நாளாக வனத்துறையினர் வேறு யானை  கூட்டத்திடம் சேர்க்க முயன்றனர். அந்த யானை கூட்டமும் குட்டி யானையை சேர்க்க முன்வரவில்லை. குட்டி யானையை யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இதனால், அடுத்தகட்டமாக முதுமலை அல்லது டாப் சிலிப் முகாமிற்கு குட்டியை அழைத்து சென்று அங்கு வைத்து பராமரிக்க திட்டமிட்டுள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com