அதிரப்பள்ளி அருகே எண்ணெய் பண்ணை தோட்டம் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்

திருச்சூர் மாவட்ட வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வால்பாறை வழியாகவும் கேரளா மாநிலம் திருச்சூர் பகுதி வழியாகவும் பயணித்து வருகின்றனர்.

இந்த அதிரபள்ளிக்கு செல்லும் சாலை என்பது அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இந்தப் பகுதியில் அவ்வப்போது யானை, கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் என்பது காணப்படும் குறிப்பாக யானைகளின் நடமாட்டம் சாலையில் ஆங்காங்கே அதிகமாக காணப்படும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் சென்று அறிவுறுத்தி வருவதுண்டு.

இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து குட்டிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அடங்கிய கூட்டம் ஒன்று வெளியேறிய நிலையில் அதிரப்பள்ளி அருகே உள்ள எண்ணெய் பண்ணை தோட்டம் பகுதியில் முகாமிட்டு சாலை பகுதிகளில் உலா வருகிறது. இதை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டிகளுடன் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானைகள், இந்த பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில் கேரளா மாநில திருச்சூர் மாவட்ட வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com