

சென்னை,
கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரம் கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த அரசாணையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;-
40 கிராமுக்கு குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி, ஒரு குடும்பத்துக்கு 5 சவரன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசல், வட்டியை அரசு ஏற்று, தள்ளுபடி தொகையை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
நகைக்கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16 லட்சம் நகைக்கடன்தாரர்கள் பயன்பெறுவர்.தள்ளுபடி தொடர்பான கூடுதல் நெறிமுறைகளை கூட்டுறவு சங்கப் பதிவாளர் வகுத்து கொள்ளலாம். நகைக்கடன் தள்ளுபடி என்பது குடும்பத்திற்கு 5 சவரன் என சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.