எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை புதுப்பிக்க வேண்டும்

பருவமழை தொடங்குவதற்கு முன்பு எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை புதுப்பிக்க வேண்டும்
Published on

விழுப்புரம்

நிர்வாகக்குழு கூட்டம்

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் சங்க தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் துணைத்தலைவர்கள் கலிவரதன், ராஜாராமன், வெங்கடசாமி, கிருஷ்ணதாஸ், நடராஜன், ரங்கநாதன், தண்டபாணி, பெருமாள், சுப்பிரமணியன், செந்தில்குமார், மணிவண்ணன், முத்துநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், 2021-22-ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு கரும்புகளை வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு கிரையத்தொகையை வருகிற அக்டோபர் 31-ந் தேதிக்குள் முண்டியம்பாக்கம், செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரைஆலை நிர்வாகம் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க செய்து வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று வாகன பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது, அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.195-ஐ கரும்பு அரவை முடிந்ததும் அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை அரசு விரைவாக நிறைவேற்றி விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், பருவமழை தொடங்குவதற்கு முன்பு எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com