இமானுவேல் சேகரனாரின் புகழ்ச்சுடர் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

தீரமிகு தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரனாரின் புகழ்ச்சுடர் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்
Published on

தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!

அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com