இமானுவேல்சேகரன் பிறந்தநாள் விழா

இமானுவேல்சேகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இமானுவேல்சேகரன் பிறந்தநாள் விழா
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தில் இ்மானுவேல்சேகரன் 100-வது பிறந்தநாள் விழா வீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத் தலைவர் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் பேரவை பொதுச்செயலாளர் தெய்வேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் மற்றும் ஓசனூத்து இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோன்று, இம்மானுவேல் சேகரன் 99-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர்

நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமையில், மாநில பொது செயலாளர் செல்லப்பா முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com