அவசர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம், மூலைகரைப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அவசர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
Published on

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மூலைகரைப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21.2.2026, சனிக்கிழமை) முக்கிய அவசர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com