மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசு, திருமாவளவன் கைது

பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். #BusFareHike | #BusFareHikeProtest
மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசு, திருமாவளவன் கைது
Published on

சென்னை

பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக செயல்தலைவரும் எதர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து கையில் கொடியேந்தி பேரணியாக வந்தார். அவருடன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர்.

பேரணி முடிவில் கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் அரசுப் பேருந்தை மறித்து ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெரவள்ளூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

போராட்டத்தின் போது மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும். * கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - பேருந்து கட்டண குறைப்பு, கண் துடைப்பு நாடகம் என கூறினார்.

* சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற மறியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். சாலையின் இரு மருங்கிலும் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தின் போது வைகோ கூறியதாவது:-

அரசுப்பேருந்துகளில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் எதிர்க்கட்சிகளின் கடமை தவறை எதிர்த்து போராடுவது; ஆளுங்கட்சியின் கடமை அதனை திருத்திக்கொள்வது ஆகும் என கூறினார்.

* பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கைது செய்யப்பட்டனர்.

* புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.

* நெல்லையில் திமுக மத்தியமாவட்ட செயலாளர் அப்துல்வஹாப் தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் லீக் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யபட்டனர்.

* திருவள்ளூரில் 4 இடங்களில் அரசுப்பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு; ஆட்சியர் அலுவலகம், பேருந்து பணிமனை, சென்றான் பாளையம், புதூரில் பஸ் கண்ணாடி உடைக்கபட்டது.

* சென்னை சேத்துப்பட்டு மேயர் ராதாகிருஷ்ணன் சாலையில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட தயாநிதி மாறன் உள்ளிட்ட நூற்றுக்கணக் கானோரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் அதே பகுதியில் உள்ள மோத்தி மகாலில் தங்க வைக் கப்பட்டனர்.

* காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை யில் சென்னை ராயப் பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் ஊர்வலமாக வந்து ராயப் பேட்டை மணிக்கூண்டு அருகில் இன்று பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கோஷ மிட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

#MKStalin | #BusFareHike | #BusFareHikeProtest

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com