மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

உவரியில் மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்தார்.
மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு
Published on

திசையன்விளை:

உவரியை சேர்ந்தவர் சத்தியன் (வயது 50). மின்சார வாரியத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மின்கம்பத்தில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் உவரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com