

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பண் என்கிற வடிவேல் (வயது 45). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் நிறுவனங்களுக்கு புரோக்கர் வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வடிவேலு பணி முடிந்தவுடன் பறவைகள் சாலையில் உள்ள தனியார் பஸ்சில் தூங்க சென்றார். பின்னர் நேற்று காலை வடிவேலுடன் வேலை செய்யும் செல்வகுமார் என்பவர் பஸ்சில் சென்று பார்த்த போது வடிவேலு இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.