கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

விருதுநகர் அருகே கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

மதுரை மாவட்டம் சந்தையூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்லும்போது விருதுநகர்- சிவகாசி ரோட்டில் சாய்பாபா கோவில் அருகே பெட்ரோல் போடுவதற்காக சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி இவரது மனைவி கற்பகவள்ளி (27) கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் காரை ஓட்டி வந்த சிவகாசியை சேர்ந்த விஸ்வநாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com