காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்தில் சேர்க்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்தில் சேர்க்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்தில் சேர்க்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து சத்துணவு ஊழியர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சமூக நலத்துறை ஆணையரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அ.மலர்விழி, பொருளாளர் எம்.ஆர்.திலகவதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை பள்ளி சத்துணவுத் திட்டத்திலும் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com