திட்டக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

திட்டக்குடியில் அடுத்த மாதம் 1-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
திட்டக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்
Published on

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு (ஆண்கள், பெண்கள் இரு பாலரும்) வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) திட்டக்குடி, ஸ்ரீ சொர்ணம் ஆறுமுகம் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது.

முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாமில் பங்கேற்பவர்கள் உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும். மேலும், இதர தகவல்களுக்கு கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தை தொலைபேசி எண்கள், அலுவலகம் 04142-292143, உதவி திட்ட அலுவலர்களின் கைபேசி எண்கள்: 9444094261, 9444094258 தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com