தோரணமலையில் வேலைவாய்ப்பு முகாம்: பட்டதாரிகள் பலர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.
தோரணமலையில் வேலைவாய்ப்பு முகாம்: பட்டதாரிகள் பலர் பங்கேற்பு
Published on

தென்காசி மாவட்டம், கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆன்மிகப் பணியோடு அறபணிகளும் நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நூல் நிலையத்தில் போட்டித்தேர்வுக்கான பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளன. கோவிலில் தங்கியும் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) தோரண மலையில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. திருச்சியில் உள்ள ரானே நிறுவனம் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தது. டாக்டர் தர்மராஜ் முகாமை தொடங்கி வைத்தார். இதில் 2021 முதல் 2025 வரை முடித்த பட்டதாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏ.என்.எஸ். குழும தலைவர் க.கோவிந்தசாமி கலந்துகொண்டு விளக்கம் அளித்தார். இதில் பங்கேற்ற பலர் பணிக்கு தேர்வு பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

அவர் கூறும்போது வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்காதவர்கள் 70107 61914 மற்றும் 9361068669 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு படிப்புக்கு தகுந்த வேலையை பெறலாம் என்றும் அந்த நிறுவனத்தார் இன்டர்வியூ என டென்ஷன் ஆக்க மாட்டார்கள் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com