சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.30,000 சம்பளம்!

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Guest Lecture பணிக்கு செப்டம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.30,000 சம்பளம்!
Published on

சென்னை, 

சென்னை பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Guest Lecture பணிக்கு 2 காலியிடமும், Teaching cum Research Fellow பணிக்கு 3 காலியிடமும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Guest Lecture பணிக்கு விண்ணப்பிக்க பயோடெக்னாலஜியில் பி.எச்டி படித்திருக்க வேண்டும். இதேபோல் Teaching cum Research Fellow பணிக்கு எம்எஸ்சி அனாலிடிகல் கெமிஸ்ட்ரி படித்திருக்கவேண்டும். Guest Lecture பணிக்கு மாதச்சம்பளம் ரூ.30000 என்றும், Teaching cum Research Fellow பணிக்கு ரூ.15000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Guest Lecture பணிக்கு செப்டம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். Teaching cum Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 4ம்தேதி கடைசிநாள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (https://www.unom.ac.in/index.php?route=administration/appointments) வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com