ஏணக்கண்மாயில் மீன்பிடி திருவிழா

ஏணக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
ஏணக்கண்மாயில் மீன்பிடி திருவிழா
Published on

பொன்னமராவதி தாலுகா காட்டுப்பட்டி ஊராட்சியில் உள்ள ஏணக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு திரளான பொதுமக்கள் கண்மாயில் அதிகாலையிலேயே திரண்டனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் உள்ள மடை முன்பு தேங்காய் உடைத்து வெள்ளை துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி, கட்லா உள்ளிட்ட பல வகை மீன்களை பிடித்து சென்றனர். பின்னர் அவர்களுக்கு கிடைத்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com