6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு இன்று ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்

வருகிற 16-ந்தேதிக்குள் இறுதித்தேர்வை முடிக்க ஏதுவாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பள்​ளிக்கல்வி பாடத் திட்​டத்​தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்​வு​கள் நிறைவு பெற்​று​விட்​டன. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இத்​தேர்வு வரும் 6-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. அதே​போல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான முழு ஆண்டு தேர்​வு​கள் வரும் 10ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடத்​தப்​படும் என பள்​ளிக் கல்​வித்துறை சார்பில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்வு முன்கூட்டியே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறை அட்டவணையை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்க இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து 4, 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 6-ந்தேதியில் இருந்தும், 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுக்கு வருகிற 8-ந்தேதியில் இருந்தும் ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தமாக வருகிற 16-ந்தேதிக்குள் தேர்வை முடிக்க ஏதுவாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதாவது தேர்தல் 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக ஆண்டு இறுதித்தேர்வு நடத்தி முடிக்கப்பட இருக்கிறது. தேர்வு முடிந்ததும் 17-ந்தேதியில் இருந்து மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை தொடங்கும் எனவும், ஆனால் ஆசிரியர்களுக்கு பள்ளி இறுதிநாள் வரை பணிக்கு வர அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும். விடு​முறை முடிந்து மீண்டும் பள்​ளி​களை ஜூன் 4-ம் தேதி திறப்​ப​தற்​கு திட்​ட​மிட்டு வரு​வ​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com