அமலாக்கத்துறை அதிகாரி கைது: சட்டம் தன் கடமையை செய்யும் - அமைச்சர் முத்துசாமி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பணம் வழங்கப்படுமா என்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
அமலாக்கத்துறை அதிகாரி கைது: சட்டம் தன் கடமையை செய்யும் - அமைச்சர் முத்துசாமி
Published on

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கி பேசினார்.

இதன் பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பணம் வழங்கப்படுமா என்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார். அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். யார் லஞ்சம் வாங்கினாலும் தவறு தான். இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com