என்ஜின் பழுது; காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக சென்னைக்கு புறப்பட்டது

சென்னை செல்லும் பல்லவன் ரெயில் என்ஜின் பழுதினால் காரைக்குடியில் இருந்து 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக புறப்பட்டு சென்றது.
என்ஜின் பழுது; காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக சென்னைக்கு புறப்பட்டது
Published on

திருச்சி,

காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பல்லவன் ரெயில் தினசரி இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சென்னை செல்லும் பல்லவன் ரெயில் என்ஜின் பழுதினால் காரைக்குடியில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை.

இதனால் திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு பல்லவன் ரெயில் இயக்கப்படும் என தெரிவித்தது.

இந்நிலையில், மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு சென்னை செல்லும் பல்லவன் ரெயில் காரைக்குடியில் இருந்து 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக புறப்பட்டு சென்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com