மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட்டுக்கான என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளுக்கான செமி கிரையோஜினிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மகேந்திரகிரி இஸ்ரோ மையம்
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட்டுக்கான என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகேந்திரகிரி இஸ்ரோ மையம்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளுக்கான செமி கிரையோஜினிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது.

செமி கிரையோஜினிக் என்ஜினின் இக்னிஷன் சோதனை வெற்றி

திரவ ஆக்சிஜன் மற்றும் இஸ்ரோஜின் எரிபொருளில் இயங்கும் இந்த என்ஜினின் இக்னிஷன் சோதனை ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக 5 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக சோதனை நேரத்தை சிறிது சிறிதாக அதிகரித்து பல்வேறு கட்ட சோதனைகளை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com