விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை

நெல்லை அருகே, என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை
Published on

நெல்லை அருகே, என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயர்

நெல்லை அருகே உள்ள அனைத்தலையூரை சேர்ந்த செல்லத்துரை மகன் தீபக் (வயது 24), என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் அரசு பணிக்கான போட்டி தேர்வுக்கு தயார் ஆகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சாவு

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் தீபக் பரிதாபமாக இறந்தார்.

தீபக்கின் தந்தை கடந்த ஆண்டு இறந்து விட்டார். அந்த சம்பவம் தீபக் மனதை பாதித்து உள்ளது. இது தொடர்பாக குடும்பத்தினரிடம் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார். தந்தை இறந்த துக்கத்தில் தீபக் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com