

ராமேசுவரம்,
கேரளம் மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சனித் (வயது 25). என்ஜினீயர். இவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கேரளத்தில் இருந்து கடந்த மே மாதம் 25-ந்தேதி சைக்கிளில் முன் பக்க சக்கரம் இன்றி பின்பக்க சக்க ரத்தை மட்டும் பயன்படுத்தி ஒரு சக்கரத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கினார்.
கேரளத்தில் இருந்து புறப்பட்ட இவர் கோவை வழியாக பழனி, மதுரை, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் வந்தடைந்தார். பின்னர் தனுஷ்கோடி சென்று அங்கு சுற்றுலா பயணிகளிடம் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார்.
அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி, சென்னை வழியாக நேபாளத்தில் தனது விழிப்புணர்வு பிரசாரத்தை முடிக்கவுள்ளதாக தெரிவித்தார். 1 நாளைக்கு 30 முதல் 40 கிலோமீட் டர் வரை ஒற்றை சக்கரத்தில் சைக்கிள் பயணம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். சைக்கிளில் முன்பக்க சக்கரம் இன்றி பின்பக்க சக்கரத்தை மட்டுமே வைத்து சாலைகளில் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் வாலிபரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.