என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆற்காடு அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஆற்காடு அடுத்த ராமநாதபுரம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). பொறியியல் பட்டதாரியான இவர் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com