விபத்தில் என்ஜினீயர் பலி

பாவூர்சத்திரம் அருகே விபத்தில் என்ஜினீயர் பலியானார்.
விபத்தில் என்ஜினீயர் பலி
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர்-பொடியனூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் மகன் ராஜேஷ்குமார் (வயது 20). என்ஜினீயரான இவர் நேற்று மதியம் தென்காசிக்கு ஜவுளி எடுக்க சென்று விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது ராமச்சந்திரபட்டணம் பகுதியில் ஒரு திருப்பத்தில் வந்த போது, எதிரே மினி லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- மினி லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com