வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

தேனியில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தேனி என்.ஆர்.டி. நகர், ஜவகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜராஜன் (வயது 29). என்ஜினீயர். இவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என மனவிரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அவர் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று காலை அவரை சாப்பிடுவதற்கு அழைப்பதற்காக மாடியில் உள்ள அறைக்கு ராணி சென்றார். அப்போது அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு ராஜராஜன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ராஜராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ராணி, தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com