பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அக்டோபர் 17ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுப்பிரிவு மாணவர்கள் 1, 36, 973 பேருக்கு, கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கான முதல் சுற்று தரவரிசைப்பட்டியிலில் முதல் 14,788 வரை இடம் பெற்றவர்களுக்கு, இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தரவரிசைப் பட்டியிலில் 14,789 முதல் 45,227 வரை பெற்றவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரையில் 2 வது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதேபோல் தொழிற்கல்விப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வும் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கடந்த வாரம் தொடங்கிய கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான, 6,442 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com