என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை: அழகு கலை படிக்க பெற்றோர் அனுப்பாததால் விபரீத முடிவு

அழகு கலை படிப்புக்கு பெற்றோர் அனுப்பாததால் என்ஜினீரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை: அழகு கலை படிக்க பெற்றோர் அனுப்பாததால் விபரீத முடிவு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மாங்காலை பழங்குடியின பகுதியை சேர்ந்தவர் மணி. இவருக்கு 2 மகள்கள். இளைய மகள் மோனிஷா (வயது21) நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் என்ஜினீரிங் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது இறுதியாண்டு தேர்வு எழுதியிருந்தார்.

இந்த நிலையில், அவருடன் படித்த தோழிகள் சென்னையில் அழகு கலை படிக்க செல்வதாக கூறியுள்ளனர். அவர்களுடன் மோனிஷாவும் அழகுக்கலை படிக்க விரும்பினார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்ட பெற்றோர், 'தற்போது சென்னை சென்று படிப்பதற்கான பொருளாதார வசதியில்லை. மேற்கொண்டு எதுவும் படிக்க செல்ல வேண்டாம்' என்று கூறினர்.

தீக்குளித்தார்

இதனால் மோனிஷா மனமுடைந்த நிலையில் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். ஆனால், மிகுந்த மனவருத்தத்தில் இருந்த மோனிஷா நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனது அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் மோனிஷா தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com