கடற்கரை காந்திசிலை அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த என்ஜினீயரிங் மாணவர் ராட்சத அலையில் சிக்கி சாவு

கடற்கரை காந்திசிலை அருகே ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு
கடற்கரை காந்திசிலை அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த என்ஜினீயரிங் மாணவர் ராட்சத அலையில் சிக்கி சாவு
Published on

புதுச்சேரி

புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). இவரது மகன் யுவராஜ் (20). மதகடிப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தனது நண்பர்கள் 2 பேருடன் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு பின்புறம் கடலில் இறங்கி குளித்தார். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் கடலில் குதித்து அலையில் சிக்கி தத்தளித்த 3 பேரையும் மீட்டனர். அப்போது மயக்க நிலையில் இருந்த 3 பேரும் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் யுவராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com