செம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி

செம்பரம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
செம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி
Published on

என்ஜினீயரிங் மாணவர்கள்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகாஷ்(வயது 20), அர்ஷவர்தன்(20), விஷ்ணுவர்தன்(20). இவர்கள் 3 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலத்தில் அறை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் செம்பரம்பாக்கத்தில் உள்ள தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு, ஒரே மோட்டார்சைக்கிளில் தங்களது அறைக்கு சென்று கொண்டிருந்தனர்.

பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது இவர்களது மோட்டார்சைக்கிள் மோதியது.

ஒருவர் பலி

இதில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த ஆகாஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அர்ஷவர்தன், விஷ்ணுவர்தன் இருவரும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com