என்ஜினீயரிங் துணை கலந்தாய்வு நிறைவு.. 8,985 இடங்கள் நிரப்பப்பட்டன!

பொது பிரிவு கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட்டதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 167 இடங்கள் நிரப்பப்பட்டன.
துணை கலந்தாய்வு
Published on

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. அதனை தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. 3 சுற்றுகளாக பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவு ஆகியோர்களுக்கு கலந்தாய்வு கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

கலந்தாய்வு

பொது பிரிவு கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட்டதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 167 இடங்கள் நிரப்பப்பட்டன. இது தவிர சிறப்பு பிரிவிலும் சில இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த சூழலில், துணை கலந்தாய்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி. 7-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 8 ஆயிரத்து 985 இடங்கள் நிரப்பப்பட்டதாகவும், அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 280 பேருக்கு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொடக்கம்

இதனைத் தொடர்ந்து எஸ்.சி.ஏ.-ல் இருந்து எஸ்.சி. ஆக மாற்றுவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்குவதாக இருந்த நிலையில், அந்த கலந்தாய்வு சில காரணங்களால் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதலில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு அவகாசம் வழங்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com