

சென்னை
அரக்கோணம் ரெயில்வே யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், ஜூன் 8 முதல் 12-ஆம் தேதி வரை 47 புறநகர் மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் - திருத்தணி இடையே இயக்கப்படும் 2 மின்சார ரெயில்கள், திருத்தணி - அரக்கோணம் இடையே இயக்கப்படும் 2 மின்சார ரெயில்கள் மற்றும் திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஒரு மின்சார ரெயில் என மொத்தம் 5 ரெயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கடற்கரை - அரக்கோணம், ஆவடி - அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
பொறியியல் பணிகள் காரணமாக பயணிகள் சிரமத்தை தவிர்க்க முன்கூட்டியே ரெயில் நேர அட்டவணையை சரிபார்த்து பயணம் மேற்கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.