

கோவை,
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் தற்போது வரை 11 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் 7 ஆண் குழந்தைகளும், 4 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.