எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து; பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து; பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இதில் சிக்கி வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தமிழகத்தின் சென்னையில், எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து சம்பவம் பற்றி அறிந்து வருத்தமடைந்தேன். இந்த கடினம் வாய்ந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரோடு என்னுடைய நினைவுகள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.

இதற்கு முன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு இருந்த செய்தியில், எண்ணூர் விபத்தில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும். அவர்களுடைய உடலை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com