ஊருக்கு செல்வதாக கூறி வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததால் ஆத்திரம் - வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

வடமாநில இளைஞர் அரவிந்த் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு எதிரில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்த நெப்போலியன் என்பவர் மைக்காமேடு பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரிடம் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வரும் நிலையில், அரவிந்த் மான்ஜே என்பவர் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு எதிரில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த நெப்போலியன், வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக பரவிய நிலையில், உரிமையாளர் நெப்போலியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






