கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் :தச்சூரில் நாளை மறுநாள் நடக்கிறது

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் தச்சூரில் நாளை மறுநாள் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் :தச்சூரில் நாளை மறுநாள் நடக்கிறது
Published on

கள்ளக்குறிச்சி, செப்.9-

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர்கள் சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் தச்சூர் மாடர்ன் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் நடைபெற உள்ளது.

முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொள்கின்றனர்.

இதில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர். எனவே ஐ.டி.ஐ. முடித்தவர்கள் தொழிற்பழகுநர்

பயிற்சியில் சேர்ந்து தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

மேலும் ஐ.டி.ஐ சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்து கல்வி தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் புதிதாக அப்ரண்டிஸ்சாக சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.10,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com