தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்

தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 9-ந் தேதி நடக்கிறது.
தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்காக வருகிற 9-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் 10, 12, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு தொழிற்பழகுநராக சேர்ந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தொழிற் பழகுநராக தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.7,000- முதல் ரூ.13,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தொழிற்பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com