நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
Published on

சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால், அவர்களால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை சில குழந்தைகள் எட்டியிருந்தாலும், விஜயதசமி தினத்தன்று பள்ளியில் சேர்ப்பதையே சில பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள், பள்ளிகளுக்கு அழைத்து வந்து, அங்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசி, நெல் போன்றவற்றில் `அ' என்ற எழுத்தை எழுத சொல்லிக்கொடுத்தனர். பின்னர் அவர்களை பள்ளியில் சேர்ந்தனர். இதில் பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் புதிதாக சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com