அமைச்சர் இ.பெரியசாமிக்கு உற்சாக வரவேற்பு

தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு திண்டுக்கல் வந்த அமைச்சர் இ.பெரியசாமிக்கு கட்சியினர் உற்சாச வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் இ.பெரியசாமிக்கு உற்சாக வரவேற்பு
Published on

தி.மு.க. துணை பொதுச்செயலாளராக 2- வது முறையாக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று மாலை திண்டுக்கல் வந்த அமைச்சர் இ.பெரியசாமிக்கு சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே தி.மு.க. கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் எம்.எல்.ஏ., வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால், மேரி, பொருளாளர் சத்தியமூர்த்தி, அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் ராஜா, மாநகர நிர்வாகிகள் முகமது இப்ராகிம், அழகர்சாமி, சித்திக்,மாநகர பொருளாளர் சரவணன், மற்றும் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டு அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com