மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. மேலும் அனைவருக்கும் ரூ.1,000 வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது "மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 9 லட்சம் பேர் இதுவரை மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்த 9 லட்சம் பேரில் தகுதியானோருக்கு ரூ.1,000 வழங்கப்படும். உரிமைத்தொகை திட்டத்தில் குறைகள் இருப்பின் ஆதாரங்களுடன் கூறலாம். 1 கோடியே 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர் இதற்குமேல் தாண்டினாலும் பரிசீலனை செய்வோம்.

அதிமுக, வேறு கட்சி என்று பார்க்கமாட்டோம், எந்த கட்சியாக இருந்தாலும் நியாயமானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை உறுதியாக வழங்குவோம். குறைகளை ஆதாரத்துடன் சொல்லுங்கள், நிவர்த்தி செய்கிறோம். மேல்முறையீடு செய்பவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக சொல்கிறீர்கள், ஆதாரங்களை கொடுங்கள்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com