சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: 16 மாநிலங்களை கடந்து மாமல்லபுரம் வந்த மும்பை மாணவர்

சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவியக்கல்லூரி மாணவர் 16 மாநிலங்களை கடந்து மாமல்லபுரம் வந்தார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: 16 மாநிலங்களை கடந்து மாமல்லபுரம் வந்த மும்பை மாணவர்
Published on

மாமல்லபுரம்:

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ஓவியக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவர் பிரதீக்ஜாதவ் (வயது 26). சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் காற்று மாசு ஏற்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் மற்றும் எரிபொருள் நிரப்பிய வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கவும் வலியுறுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையில் தொடங்கினார்.

இவர் குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 16 மாநிலங்கள் வழியாக 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து தமிழகத்திற்கு வந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி, புதுச்சேரி வந்து பின்னர் இவர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வந்தார்.

பயணம் குறித்து ஒவிய மாணவர் பிரதீக்ஜாதவ் கூறும்போது,

சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசு ஏற்பட்டு வருவதாகவும், அதனால் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சைக்கிள் பயன்படுத்துங்கள் என்ற கருத்தினை வலியுறுத்தி தான் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com