விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் நடைமுறை - தனிமைப் படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதால் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் நடைமுறை - தனிமைப் படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Published on

சென்னை,

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சொந்த ஊருக்குத் திரும்பிய பலரும் மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

கடந்த 16 ஆம் தேதி வரை 2 லட்சத்து 25 ஆயிரத்து 564 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தநிலையில் கடந்த 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இ பாஸ் தளர்வுகளுக்குப் பிறகு கடந்த 7 நாட்களில் சென்னை திரும்பிய 79 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 4 ஆயிரத்து 588 ஆக உயர்ந்திருப்பதாகவும் இதில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 649 பேர் தனிமைப் படுத்துதல் காலத்தை நிறைவு செய்து இருப்பதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com